விவசாயிகள் பலி : 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கலானது

Farmers killed 5,000-page indictment filed

லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக, 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் விவசாயிகள் 1 ஆண்டுக்கு மேலான போராட்டம் நடத்தினார்கள். 

அப்போது, உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில், விவசாயிகளின் மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தின்போது, விவசாயிகள் மீது வாகனம் மோதியதில் 4 விவசாயிகளும், அதை அடுத்து நடந்த வன்முறை சம்பவத்தின் போது 4 பேரும் இறந்தனர்.

இந்த சம்பவத்துக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஸ் மிஸ்ரா தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக, ஆசிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 

இந்நிலையில், லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக, 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share this story