மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் : கல்வி இயக்ககம் அறிவிப்பு

First application today for medical courses Directorate of Education Announcement

மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., ரேடியோகிராபி உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. 

இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவா் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி படிப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு மாணவா் சேர்க்கைக்கு இணையதளத்தில் பதிவு செய்வது, இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 

இதனை  http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நவம்பா் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளா், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவம்பா் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story