ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை.. என்ன காரணம்?

By 
tata1

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (42). கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (40). தனியார் வங்கி ஊழியர். இவர்களுக்கு ஆருத்ரா (11), சுபத்ரா (7) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 

தஞ்சாவூரில் இரு வேறு சம்பவங்களில் குழந்தைகள் உட்பட 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (42). கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (40). தனியார் வங்கி ஊழியர். இவர்களுக்கு ஆருத்ரா (11), சுபத்ரா (7) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஆர்த்தி, பாபநாசத்தில் தோழி வளைகாப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, இரண்டு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் உத்தாணி தண்டவாளத்துக்கு சென்ற ஆர்த்தி தனது இரு மகள்களின் கண்களில் துணியைக் கட்டினார். இதேபோல ஆர்த்தியும் தனது கண்களில் துணியைக் கட்டிக் கொண்டு மூவரும்  அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல் திருவிடைமருதூர் கட்டளை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி ரேவதி (50), மகள் மகேஸ்வரி (30) ஆகியோர்  மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் குழந்தைகள் உட்பட 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story