கரும்பு தோட்டத்தில் துர்நாற்றம்; நிர்வாண கோலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை? திடுக்கிடும் சம்பவம்..

By 
cricme1

கரும்பு தோட்டத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயம் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்ட கரும்பை தொழிலாளர்கள் அறுவடை செய்துகொண்டிருந்தனர். அப்போது கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் சந்தேகமடைந்து தொழிலாளர்கள் தோட்டத்தின் மையப்பகுதியில் சென்று பார்த்தனர். 

அப்போது நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனிவேல் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலையானவர் தண்டராம்பட்டு ஊராட்சி டேம் ரோடு பகுதியை சேர்ந்த சங்கர் மகள் ராஜேஸ்வரி (30) என்பது தெரியவந்தது. மேலும் மனநலம் பாதித்திருந்த ராஜேஸ்வரி கடந்த 9ம் தேதியில் இருந்து காணவில்லை என்று அளித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததும் தெரியவந்தது. 

தண்டராம்பட்டு போலீசார், இளம் பெண்ணின் உடல் நிர்வாணமாக வீசப்பட்டுள்ளதால் அவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்க் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

Share this story