இளம்பெண்ணை காதலித்து ரூ.68 லட்சம் மோசடி; வாலிபர் தற்கொலை?

porur

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் நிசாந்த் (வயது28). இவருக்கும் வடபழனி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

இந்த நிலையில் இளம்பெண்ணின் பூர்வீக சொத்து ஒன்று விற்கப்பட்டு அதன் மூலம் ரு.68 லட்சம் கிடைத்தது. இதை அறிந்த நிசாந்த் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று கூறி இளம்பெண்ணிடம் இருந்து ரூ.68 லட்சத்தை வாங்கினார். பின்னர் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

மேலும் இளம்பெண்ணையும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். இதையும் படியுங்கள்: திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் பாசிகள் படர்ந்ததால் சங்கு மேலே வருமா? பக்தர்கள் கேள்வி இதற்கிடையே நிசாந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 3-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதனை அறிந்த இளம்பெண் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதில் நிஷாந்த், காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார். மேலும் ரூ.68 லட்சம் பணத்தையும் பெற்று மோசடி செய்து விட்டார். எனவே நிசாந்த் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து கடந்த 3-ந் தேதி நடக்க இருந்த நிசாந்த்தின் திருமணத்தை போலீசார் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.

மேலும் நிசாந்த் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையும் படியுங்கள்: திருமுடிவாக்கம் அருகே மின்கசிவு காரணமாக தீ விபத்து- 21 வீடுகள் எரிந்து சேதம் இதனால் எந்த நேரமும் கைதாகலாம் என்பதை அறிந்த நிசாந்த் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நிசாந்த், நேற்று இரவு ஓ.எம்.ஆர் சாலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் அவர், நண்பர் ஒருவரின் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் நிசாந்த் "நான் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என்று வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு செல்போனை "சுவிட்ச் ஆப்" செய்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் போரூர் ஏரி அருகே வந்து பார்த்தபோது கார் மட்டும் நின்றது. நிசாந்த் மாயமாகி இருந்தார். இதுகுறித்து போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயல் தீயனைப்பு வீரர்கள் போரூர் ஏரியில் இறங்கி தேடிவருகிறார்கள்.

ஆனால் நிசாந்தின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நிசாந்த் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது போலீசில் புகார் செய்ததால் கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் வேறு எங்காவது தப்பி ஓடி விட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

Share this story