ரஜினி, தனுஷ் முதல் ராம்சரண் வரை... சினிமா நட்சத்திரங்களின் வரவால் ஜொலித்த அயோத்தி ராமர் கோவில்..

By 
ram mandir4

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட கோலிவுட், பாலிவுட், டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும், அம்பானி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

* அழகிய சேலை அணிந்தபடி வந்து அயோத்தி குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டார் நடிகை கங்கனா ரணாவத்.

* பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான ஆலியா பட் - ரன்பீர் சிங் இருவரும் ஒன்றாக அமர்ந்தபடி கட்சி அளித்தனர்.

* காந்தாரா என்கிற மாஸ் ஹிட் படத்தை இயக்கியதோடு அதில் ஹீரோவாகவும் நடித்து அசத்திய நடிகர் ரிஷப் ஷெட்டி தன் மனைவியுடன் வந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டார்.

* பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தன்னுடைய மகன் அபிஷேக் பச்சனுடன் அமர்ந்து குடமுழுக்கு நிகழ்வுகளை கண்டுகளித்தார்.

* கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

* பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல் ஜோடி பாரம்பரிய உடையணிந்து வந்து ராமர் கோவில் குடமுழுக்கில் கலந்துகொண்டனர்.

* ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள வந்த நடிகர் தனுஷ், காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டியை சந்தித்து நலம் விசாரித்தார். ராம் சரணும் கலந்து கொண்டார்.

* இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி, தன் மனைவி நீடா அம்பானி உடன் வந்து அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டார்.

* அயோத்திக்கு கோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக கிளம்பி சென்றதோடு, கும்பாபிஷேகத்திலும் முதல் ஆளாக கலந்துகொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Share this story