கூட்டு பாலியல் வன்முறை: 5 பேர் கைது..

By 
upup

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

தாஜ்கஞ்ச் போலீஸாருக்கு ஒரு ஹோம் ஸ்டேயில், அங்குள்ள பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறி அழைப்பு வந்தது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்படி, தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று உதவி ஆணையர் அர்ச்சனா சிங் காவல்துறை, ஆக்ரா சதர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதாக ஆக்ரா போலீசார் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  அந்த பெண், அதே ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியான வைரல் வீடியோ ஒன்று, பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழுவால் தாக்கப்பட்டதைக் காட்டுகிறது.

"இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, இந்த வழக்கில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆக்ரா சதர் காவல்துறை உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறினார்.

இந்த விவகாரத்தில் கற்பழிப்பு, தாக்குதல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Share this story