காவலர் தேர்வு.. அனுமதி சீட்டில் நடிகை சன்னி லியோனின் புகைப்படம்: குழம்பி நிற்கும் சைபர் க்ரைம் போலீசார்..

By 
len1

துவக்கத்தில் அடல்ட் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட் மற்றும் கோலிவுட் உலகில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவருடைய புகைப்படம் ஒன்று காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தர பிரதேச மாநிலத்தில், அம்மாநில காவல் துறையில் உள்ள காவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு அம்மாநிலத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், சுமார் 2300க்கும் மேற்பட்ட மையங்களில் நேற்று நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் உத்தரப்பிரதேச காவலர் மற்றும் பணி உயர்வு வாரியம் வலைதளத்தில் பதிவாகியுள்ள ஒரு அனுமதி சிட்டில், பிரபல நடிகை சன்னி லியோன் அவர்களுடைய பெயரும் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. "12258574" என்கின்ற பதிவு என்னோடு, சன்னி லியோன் என்று அவர் பெயரையும் குறிப்பிட்டு அவர் புகைப்படத்தையும் இணைத்து இந்த அனுமதி சீட்டு வெளியாகி உள்ளது. 

இதை கண்ட தேர்வு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், இதனையடுத்து சைபர் கிரைம் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் விசாரணையை தொடங்கினர். அதில் கண்னோஜ் பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்டு தான் இந்த அனுமதி சீட்டு போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. 

மேலும் அந்த விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களும் பொய்யான தகவல்கள் என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு அலைபேசி எண்ணானது, இந்த பரீட்சைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு நபருடைய செல்போன் எண் என்றும் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this story