உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி: இந்தியர்களுக்கு, பிரான்ஸ் அதிபர் குடியரசு தின வாழ்த்து..

By 
rday

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் 75ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக தனி விமானம் மூலமாக ஜெய்பூர் வந்த அவர் அங்கு நடந்த கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இந்த நிலையில் தான் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இம்மானுவேல் -அன்பு நண்பரே உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி, பிரதமர் மோடி, இந்தியர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக பிரான்ஸ் நாட்டில் 30,000 மாணவர்களை படிக்க அனுமதிக்கப்படுவதாக கூறினார். இது குறித்து மேலும், அவர் கூறியிருப்பதாவது: இன்னும் 6 ஆண்டுக்குள்ளாக பிரான்ஸ் நாட்டில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். இந்தியா மற்றும் பிரான்ஸ் இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில் 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்திய மாணவர்கள் பிரான்ஸ் படிக்க அனுமதிக்கப்படுவது எனது லட்சிய இலக்கு. இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார்.

இந்திய மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி தெரியாதவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனுமதிக்க சர்வதேச வகுப்புகள் நடத்தப்படும். எங்களது நாட்டில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு விசா செயல்முறையை எளிமைப்படுத்துவோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story