தல-தளபதி இன்று புதிய கூட்டணி? : குஷியாய் ரசிகர்கள் வைரல் பதிவு..

Head-commander new alliance today  Kushiai fans go viral ..

பீஸ்ட் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு திடீர் விசிட் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.டோனி, நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசினார்.

விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. 

அதேபோல், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி நடிக்கும் விளம்பரப் படப்பிடிப்பும், அதே ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது.

அப்போது பீஸ்ட் படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் விசிட் அடித்த டோனி, அங்கு நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பு பிரபலங்கள் அருகருகே பணி நிமித்தமாய் இருக்கும் பட்சத்தில், நிகழும் தற்செயலான சந்திப்புதான் என கூறப்படுகிறது. 

அவ்வகையில், எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இப்புகைப் படங்களை ரசிகர்கள் தல-தளபதி புதிய கூட்டணி? என குஷியாய் பதிவிட்டு வருகின்றனர்.

Share this story