சென்னையில் கனமழை : 'உதவி எண்கள்' மாநகராட்சி அறிவிப்பு

By 
Heavy rain in Chennai 'Helpline' Corporation announcement

வங்கக் கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

விடிய விடிய கனமழை :

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னையில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் 2 பக்கங்களும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. 

முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால், சென்னையில் பல இடங்களில் 10 செ.மீ-க்கு மழை பதிவாகியுள்ளது. 

அதிகபட்சமாக, வில்லிவாக்கத்தில் 16செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 14செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்பு எண்கள் :

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

1913, 04425619206, 04425619207, 04425619208, ஆகிய எண்ணிற்கு கால் செய்தும், 9445477205 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
*

Share this story