15 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..

By 
rain10

இன்று மாலை 5 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அது மட்டும் இன்றி, வங்க கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியுள்ளதை அடுத்து மழை மேலும்  வலுவாக பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this story