தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை: ஆய்வு மையம் எச்சரிக்கை..

By 
rain1

இன்றிரவு தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தெற்கு மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேலும் நாளை முதல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this story