இந்தியா-கத்தார் உறவு எப்படி இருக்கிறது? - கத்தார் மன்னரை சந்தித்த பின், பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்..

By 
qqq

இரண்டு நாள் பயணமாக, அமீரகம் சென்றுள்ள பாரத பிரதமர் மோடி அவர்கள் நேற்று பிப்ரவரி 15ஆம் தேதி கத்தார் நாட்டு மன்னரை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து கலந்துரையாடினார்.

அமீரகத்திற்கு இரண்டு நாள் பயணமாக, கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி அபுதாபியில் முதல் முதலாக கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறந்து வைத்தார். 

அதனைத்  தொடர்ந்து, பல அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்று பிப்ரவரி 15ஆம் தேதி கத்தார் நாட்டிற்கு சென்றார். அங்கு அந்நாட்டு மன்னரும், ராணுவ வீரர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கத்தார் நாட்டில் சிக்கியிருந்த 8 இந்திய கடற்படையினரை அந்நாடு விடுவித்த சில நாட்களுக்குப் பிறகு கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியா-கத்தார் உறவுகள் வலுவாகவும் வளர்ந்து வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார். 

மேலும், எதிர்காலத் துறைகளில் இரு தரப்பினரும் ஒத்துழைப்பதைப் எதிர்பார்க்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் தெரிவித்தார். அமீர் உடனான தனது சந்திப்பு "அற்புதம்" என்று குறிப்பிட்ட மோடி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார். 

இந்தியா-கத்தார் உறவுகளின் முழு அளவையும் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம், மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தோம். நமது கிரகத்திற்கு பயனளிக்கும் எதிர்காலத் துறைகளில் ஒத்துழைக்க நமது நாடுகளும் எதிர்நோக்குகின்றன" என்று மோடி ட்விட்டரில் கூறினார். 

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, விண்வெளி, கலாச்சாரம் மற்றும் மக்கள் ஆகிய துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை மையமாகக் கொண்டது. "இந்தியா மற்றும் கத்தார் உறவுகள் வலுவாக வளர்ந்து வருகின்றன என்றும், மற்றொரு பதிவில்.. தோஹாவில் அவருக்கு அளிக்கப்பட்ட சடங்கு வரவேற்பு புகைப்படங்களுடன் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார். 

Share this story