தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எத்தனை.?: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..

By 
dmdm

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் மத்தியில் வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறது.

இந்தநிலையில்  சென்னை தலைமை செயலகத்தில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தலைமையில் ஏடிஜிபி மகேஷ் அகர்வால், ஜெயராம், மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை தென் மண்டல ஐஜி சரவணன், ஆகியோர் கலந்து கொண்ட பாதுகாப்பு தொடர்பான  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் எந்த எந்த மாவட்டத்திற்கு எத்தனை கம்பெணி துணை ராணுவ படையினர் தேவை, பதற்றமான நாடாளுமன்ற தொகுதிகள், வாக்குசாவடிகளுக்கு கூடுதலாக துணை ராணுவ படையினர் அனுப்புவது குறித்து ஆலோசிக்கபட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு,

நாடாளுமன்ற  தேர்தலுக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழ்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர், ஒரு கம்பெனிக்கு 90 பேர் வீதம் நாளை 15 கம்பெனி துணை ராணுவமும், 7ம் தேதி 10 கம்பெனி துணை ராணுவமும் பாதுகாப்பு பணிகாக முதல் கட்டமாக வர உள்ளனர்,

வருபவர்கள் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று கொடி அணிவகுப்பு நடத்துவது, சோதனை சாவடிகள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது, என பாதுகாப்பு பணிகளுகான முன் ஏற்பாட்டு பணிகளை செய்ய உள்ளதாகவும். தேர்தல் தேதி அறிவிக்கபட்ட பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிளும் பதற்றமான வாக்குசாவடிகள் எத்தனை உள்ளது என பட்டியல் தயார் செய்யப்பட இருப்பதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார்.

Share this story