'நான் சொல்வதற்கு, நீங்கள் அனுமதித்தால்..' சோனியா காந்தி பேச்சு

'I mean, if you allow me ..' Sonia Gandhi speaks

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், இன்று செயற்குழுக் கூட்டம் கூடியது. 

முதல்முறை :

18 மாதங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

செயற்குழுக் கூட்டத்துக்கு, சோனியா காந்தி தலைமை தாங்கிப் பேசினார். அவர் கூறியதாவது :

கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் காங்கிரசின் மறுமலர்ச்சியை விரும்புகிறார்கள். 

ஆனால், அதற்கு ஒற்றுமை மற்றும் கட்சி நலன்களை முதன்மையாக வைத்திருப்பது அவசியம் ஆகும். 

நான் சொல்வதற்கு, அனுமதித்தால் :

எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்கு சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் அவசியமானது.

காங்கிரஸ் கட்சிக்கு நான்தான் முழுநேர தலைவர். நான் சொல்வதற்கு நீங்கள் அனுமதித்தால், நான் கட்சியின் முழுநேர தலைவராக செயல்படுவேன்' என்றார்.

Share this story