தங்கம் வென்றால், ரூ.3 கோடி வழங்கப்படும் : இந்திய ரயில்வே அமைச்சகம்

By 
If gold wins, Rs 3 crore will be given Indian Railways Ministry

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட வீரர்களில் 25 பேர் (20%) ரயில்வே துறை ஊழியர்கள். 

அவர்கள் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

பரிசுத்தொகை விவரம் :

இதுபற்றிய அறிவிப்பில், 'விளையாட்டு வீரர்களின் கனவான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் ரயில்வே துறையை சார்ந்தவர்கள் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளி வென்றால் ரூ.2 கோடி, வெண்கலத்திற்கு ரூ.1 கோடி என்ற அளவில் பரிசுத்தொகை அளிக்க இருக்கிறோம்.

ரூ.35 லட்சம் :

போட்டியில், இறுதிச்சுற்று வரை செல்லும் வீரர்களுக்கு ரூ.35 லட்சம், போட்டியில் கலந்து கொண்டாலே ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், தங்கப்பதக்கம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு ரூ.25 லட்சம், வெள்ளிப்பதக்கம் வென்றவரின் பயிற்சியாளருக்கு ரூ.20 லட்சம் மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்றவரின் பயிற்சியாளருக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது.

Share this story