நடிகர் தனுஷ் வழக்கில், ஐகோர்ட் அதிரடி உத்தரவு

By 
dhanush

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி மேலூர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை கடந்த 2017-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆனால், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. இதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கதிரேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே இந்த விவகாரம் குறித்த முந்தைய வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது அவரது உடலில் மச்சங்கள், தழும்புகள் போன்றவற்றை அரசு டாக்டர்கள் சரி பார்த்தனர். அந்த சமயத்தில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளராக நான் பணியாற்றியதால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வேறு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற பரிந்துரைக்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

Share this story