ஆப்கான் பள்ளிகளில், மாணவிகளுக்கு அனுமதியில்லை : கூட்டணிப் படை எதிர்ப்பு

By 
In Afghan schools, students are not allowed Coalition forces protest

ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது என்ற கொள்கையை தலிபான்கள் வகுத்துள்ளனர். 

ஏற்கனவே, அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த போது, இதே நடைமுறையை கடைபிடித்தனர்.

இப்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் அனுமதிப்போம் என்று கூறியிருந்தார்கள்.

அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் மாணவிகளையும், பெண் ஆசிரியைகளையும் அனுமதிக்கவில்லை.

இதற்கு பஞ்ச்சீர் எதிர்ப்பு கூட்டணி படையினர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். 

ஆப்கானிஸ்தானில் முழு பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றிவிட்ட போதிலும், பஞ்ச்சீர் மாகாணத்தில் மட்டும் குறிப்பிட்ட பகுதிகள் எதிர்ப்பு கூட்டணி படையினர் வசம் இருக்கின்றன. அங்கிருந்து எதிர்ப்பு கூட்டணி படை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்- பெண் என பிரித்து பார்க்காமல், எல்லோருக்கும் சம நீதியை வழங்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கொள்கை. ஆனால், தலிபான்கள் இதற்கு எதிராக இருக்கிறார்கள். 

முதலில், பெண்களை கல்வி கற்க அனுமதிப்போம் என்று கூறிவிட்டு, இப்போது அதற்கு மறுப்பு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் பெண்களுக்கென்று பிரத்யேக பள்ளிகள் ஏராளமாக இருக்கின்றன. அந்த பள்ளிகளையும் தலிபான்கள் திறக்க அனுமதிக்கவில்லை. 

இதன் மூலம், பெண் கல்விக்கு எதிராக தலிபான்கள் இருக்கிறார்கள். அவர்களால், ஆப்கானிஸ்தான் மிகவும் பின்தங்கி சென்றுவிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
*

Share this story