வங்கிகளில், நாளை முதல் ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம்; விவரம்..

 

rs2000

* ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றுள்ளதுடன் அதை வங்கிகளில் கொடுத்து மாற்ற செப்டம்பர் 30-ந்தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 23-ந்தேதி முதல் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

இதையடுத்து நாளை (23-ந்தேதி) முதல் பொதுமக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.

* மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜூன் 3-ந்தேதி வடசென்னையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கிங் ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்தர மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார். இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
 

Share this story