அதிக கட்டணம் வசூலித்தால், புகார் தெரிவிக்க வேண்டிய எண் : போக்குவரத்துத்துறை அறிவிப்பு

By 
In case of overcharging, the number to lodge a complaint is Transportation Notification

தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு அதிக அளவில் வருவதால் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு வந்திருந்த பயணிகளிடம் எந்த ஊர்களுக்கு செல்கிறீர்கள் என்று கேட்டறிந்தார். 

சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான அளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பயணிகளின் வசதிக்காக :

பொதுமக்களின் வசதிக்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட 4 பஸ் நிலையங்களுக்கு மக்கள் சென்றுவர மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏராளமான இணைப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்களிடம் தெரிவித்தார். பின்னர் அவர்  கூறியதாவது :

 ‘பொதுமக்களின் வசதிக்காக தேவையான அளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த ஊர்களுக்கு கூட்டம் அதிகமாக உள்ளதோ, அந்த ஊர்களுக்கு கூடுதலான பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

புகார் எண் :

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால், பொதுமக்கள் தாராளமாக புகார் செய்யலாம். 

இதற்காக 24749002, 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். 

பயணிகளின் வசதிக்காக 20 இடங்களில் தகவல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றார்.

உடனுக்குடன் பஸ்கள் :

கோயம்பேடு பஸ் நிலையத்தில், இன்று காலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களிலும் அதிக அளவு கூட்டம் இருந்தது. 

அதற்கேற்ப, பஸ்களும் உடனுக்குடன் வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது.

Share this story