சென்னையில், ஒரே நாளில் 28 பேரை விரட்டி, விரட்டி கடித்த தெருநாய்..

By 
dog2

சாலையில் நடமாடுவதே அச்சமடையும் சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் பள்ளியை விட்டு வீடு திரும்பிய பள்ளி சிறுமையை  மாடு முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாடு வளர்க்க கடும் கட்டுப்பாட்டை சென்னை மாநகராட்சி விதித்தது.

இருந்த போதும் அடுத்த ஒரு சில நாட்களில் மைலாப்பூரில் முதியவர் மீது மாடு முட்டியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் மறைவதற்குள் சென்னையில்  28 பேரை நாய் கடித்த சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதி போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாகும். இந்த பகுதியில் பள்ளிகள், வங்கிகள், கடைகள், தனியார்கள் அலுவலகங்கள் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்தநிலையில் வண்ணாரப்பேட்டை ஜி.ஏ சாலையில் உள்ள பகுதியில் பள்ளி முடிவடைந்ததையடுத்து வீட்டிற்கு பெற்றோர்கள் குழந்தையை அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு பொதுமக்களை பாரத்து குரைத்து கொண்டிருந்த நாய் திடீரென கடிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் நடந்து சென்றவர்கள், விழுந்து அடித்து ஓடினர்.இருந்த போதும் நாயானது 13 ஆண்கள், 15 பெண்கள் என 28 பேரை விரட்டி, விரட்டி கடித்துள்ளது.

மேலும் நாய் துரத்தியதால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் கீழே விழுந்தும் காயம் அடைந்தனர்.  இதனையடுத்து அப்பகுதி மக்களை கல்லால் நாயை அடித்ததில் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இந்தநிலையில், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள்  25 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். லேசான காயமடைந்த 3 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வண்ணாரப்பேட்டை பகுதியில் சுற்றித்திரியும் நாயை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Share this story