சென்னையில், ரயில் சேவையில் மாற்றம் : நிர்வாகம் அறிவிப்பு

By 
In Chennai, change in train service Management announcement

சென்னையில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகளை முன்னிட்டு, மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச்சில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  

இருப்பினும், சரக்கு ரயில் சேவை இயக்கப்படுகிறது.  கொரோனா 2-வது அலை பாதிப்புகள் குறைந்து காணப்படும் சூழலில், குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில்வே அறிவிப்பு :

இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

'சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே, நாளை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. 

இதனால், மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11, 11.45, தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.50 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. 

அதேபோல, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு காலை 11.15, மதியம் 12, 1, 1.20, 2 மணி, தாம்பரம் 11.30, 12.20, 12.40, 1.40, 2.20 மணி ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் இருந்து அவை இயக்கப்படும்.

தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் :

இதுதவிர, தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.20, 11.30, மதியம் 12.10, 12,30, 1.50 காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை காலை 8.45, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை காலை 10.15, 11, மதியம் 12.25 ஆகிய மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story