சென்னையில், கே.பாலசந்தர் நினைவு சதுக்கம் : தமிழக அரசு தீர்மானம்.. 

 

k.b1

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாக்களின் ஆளுமையாக விளங்கியவர் இயக்குனர் கே.பாலசந்தர். இவர் நினைவாக சென்னையில் நினைவு சதுக்கம் ஒன்று அமைக்க சென்னை மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. அதில் மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலசந்தர் நினைவாக மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் காவிரி மருத்துவமனை அருகில் ஆயிரம் சதுரடி அளவில் உள்ள போக்குவரத்து இடத்திற்கு கே.பாலசந்தர் சதுக்கம் அல்லது கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு சென்னை மாநகராட்சி மூலமாக அவ்வை சண்முகம் சாலைக்கு வி.பி.ராமன் பெயரும் மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு மறைந்த பிரபல பாடகர் டி.எம்.சவுந்தர ராஜன் பெயரும் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this story