தமிழகத்தில், ஒரே மருத்துவமனையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா : சிகிச்சைக்கு அனுமதி

In Tamil Nadu, Corona Admission to treatment for 3 doctors in one hospital

கோவையில், ஒரே மருத்துவமனையில் 3 டாக்டர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதியானது.

கோவை காந்திபுரம் 5-வது வீதியில் ஜீவன் கிளினிக் உள்ளது. இங்கு பணியாற்றும் டாக்டர்கள் உள்பட 5-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.

இதையடுத்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 3 டாக்டர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர்கள் 5 பேரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கோவையில், பல மாதங்களுக்குப் பிறகு ஒரே பகுதியில் 5 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், காந்திபுரம் 5-வது வீதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
*

Share this story