முழு ஊரடங்கில், அம்மா உணவகங்கள் செயல்படுமா?

By 
In the full curfew, do mom restaurants operate

கொரோனா 3-வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

அன்றைய தினம், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. அதே நேரத்தில் பார்சல் வினியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அம்மா உணவகங்கள் அனைத்தும், அன்று முழு அளவில் செயல்படும் என்று மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. 

சாலையோரங்களில் இயங்கும் சிறிய தள்ளுவண்டி கடைகள் மூடப்படுவதால், சாமான்ய மக்கள் பாதிக்கப்படாத வகையில், அம்மா உணவகங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அம்மா உணவங்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட, அன்று கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால், உணவு தட்டுப்பாடு வராமல் தேவையான அளவு உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், இரவு சப்பாத்தி ஆகியவை தயாரிக்க உணவுப் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 1.75 லட்சம் பேர் சாப்பிட்டு வருகிறார்கள். 

ஊரடங்கின்போது, இந்த எண்ணிக்கை மேலும் 2 லட்சம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
*

Share this story