ஒரே மருத்துவமனையில், 16 டாக்டர்கள் - 4 நர்சுகளுக்கு கொரோனா தொற்று

In the same hospital, 16 doctors - 4 nurses with corona infection

சென்னையில், கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில், தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் குடிசைப் பகுதியில் தொற்று அதிகரித்துள்ளது. இது தவிர, 52-வது வார்டில் மிண்ட் மருத்துவமனை குடியிருப்பில் 14 பேருக்கும், ஏழு கிணறில் 13 பேருக்கும் தொற்று பரவியுள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனை :

ஈ.வே.ரா. பெரியார் சாலை நால்ரோடு பகுதியிலும் தொற்று அதிகரித்துள்ளது. 

ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 14 பயிற்சி மருத்துவர்கள், 4 நர்சுகள் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 138 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிக பாதிப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்கள் விவரங்களை சேகரித்து, அந்த பகுதியில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

6 லட்சம் பேர் :

இதேபோல, பாதிப்பு அதிகம் உள்ள மற்ற மண்டலங்களிலும் தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில், இன்னும் 6 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளனர். 

கொரோனா தொற்று எந்த இடத்தில் அதிகமாக பரவுகிறது என்பதை கண்டறிந்து, அந்த பகுதியில், தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
*

Share this story