தமிழ்நாட்டில் வருமான வரித்துறை சோதனை: வரி ஏய்ப்பு புகாரில் அதிரடி

By 
raid4

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கட்டுமான நிறுவன இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை எழும்பூர், செனாய் நகர், அமைந்தகரை உள்பட 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story