கொரோனா பாதிப்பில் கமல் : நலம் விசாரித்தார் ரஜினி..

Kamal in corona infection Rajini inquired about his health

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும் கமலை, நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்து இருக்கிறார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின், லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில், கோவிட் தொற்று உறுதியானதால், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்திருந்தார். 
 
இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என்று கூறினார். 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், போன் மூலம் கமலை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்.

Share this story