எழுத்தாளர்களுக்கு 'கவிமணி' விருது : பேரவையில் இன்று அறிவிப்பு

By 
'Kavimani' Award for Writers Announcement at the Assembly today

குழந்தை எழுத்தாளர்களுக்கு 'கவிமணி விருது' வழங்கப்படும் என பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்துள்ளார்.

சட்டசபையில், உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.  

தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்  சட்டமசோதாவை சட்டசபையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
   
இந்நிலையில், குழந்தை எழுத்தாளர்களுக்கு 'கவிமணி விருது' வழங்கப்படும் என பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்துள்ளார். 

மேலும், 18 வயதுக்கு உட்பட்டோர்களில் ஆண்டுதோறும் 3 சிறப்பு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும், அவர்களுக்கு ரூ.25,000 ரொக்கம் மற்றும் சான்றிதழ், கேடயம் வழங்கப்படும்' என அறிவித்துள்ளார். 

Share this story