கேலோ இந்தியா.. சென்னை வந்த பாரத பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு அளித்த முதல்வர் ஸ்டாலின்..

By 
lplp0

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. பிரதமர் மோடி இந்த நிகழ்வை துவங்கி வைத்தார்.

முதல்முறையாக தமிழகத்தில் நடக்க உள்ள இந்த "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டிகளை சென்னையில் துவங்கி வைத்து பேசினார் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். இதற்காக பெங்களூருவில் இருந்து அவர் சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில், சென்னைக்கு வந்த பிரதமர் மோடி அவர்களுக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், ஆளுநர் ரவி அவர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி செல்ல உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் துவங்கி உள்ள இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

Share this story