ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு அதிபதி ஆன அதிர்ஷ்ட மாணவி : எப்படி தெரியுமா?

luck2

கனடாவை சேர்ந்த ஒரு மாணவி லாட்டரி மூலம் ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாறி உள்ளார். அவரது பெயர் ஜூலியட் .18 வயது மாணவியான இவர் தனது பிறந்தநாளையொட்டி அங்குள்ள வணிகவளாகத்திற்கு பொருட்கள் வாங்க தனது தாத்தாவுடன் சென்றார்.

அப்போது அவர் தாத்தா அறிவுறுத்தலின்படி லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பின்னர் அவர் அந்த சீட்டுகளை வீட்டில் வைத்து விட்டு மறந்தே போனார். இந்த நிலையில் பக்கத்து வீட்டு காரருக்கு லாட்டரியில் பரிசு விழுந்த விவரம் அவருக்கு தெரிய வந்தது.

அப்போது தான் அவருக்கு தானும் அந்த லாட்டரியை வாங்கியது நினைவுக்கு வந்தது. உடனே அவர் தான் வாங்கிய சீட்டுக்கு பரிசு விழுந்து இருக்கிறதா? என பார்த்தார். அவரது அதிர்ஷ்டம் லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ 290 கோடி பரிசு விழுந்து இருந்தது. இதனால் ஜூலியட் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

அவருக்கு கையும்,ஓடவில்லை். காலும் ஓடவில்லை.இதுபற்றி அவர் தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார். இதை கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பரிசு பெற்ற வேகத்தில் ஜூலியட் உடனடியாக ரூ 2 கோடி மதிப்பிலான சொகுசு காரை வாங்கினார். 

Share this story