3 சிறுவர்கள் உள்பட 9 நபர்களால், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; போலீசார் அதிர்ச்சி..

By 
w9

திருப்பூரில் 3 சிறுவர்கள் உள்பட 9 நபர்களால் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து 9 நபர்களையும் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து சிறுமியை உறவினர்கள் விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் ஜெய காளீஸ்வரன் (வயது 19), மதன்குமார்( 19), பரணி குமார்( 21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும், 14, 15. மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் ஒன்பது நபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Share this story