ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமல்: தமிழக அரசு அறிவிப்பு

By 
mm8

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தலாம். யுபிஐ செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் இன்று முதல் இந்த திட்டம் மொபைல் முத்தம்மா என்ற பெயரில் அமலுக்கு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளுக்கு வரும் பெண்கள் உள்பட அனைவரும் க்யூ ஆர் கோடு மூலம் பணம்  செலுத்தலாம். இந்த திட்டம் குறித்து அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்படும்

Share this story