மாடல் அழகிகள் மர்ம மரணம் : 6 பேர் கைது..திடுக்கிடும் தகவல்கள்..

Model beauties mysterious death 6 arrested .. shocking information ..

2019-ம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற அழகி அன்சி கபீர், கார் விபத்தில் பலியான வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

அழகி அன்சி கபீர் மற்றும் அழகி அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களுடைய நண்பர் உள்ளிட்டோர் மர்மமான முறையிம் மரணம் அடைந்தனர். 

ஹோட்டல் உரிமையாளர் கைது :

இவர்கள் மூவரும் நவம்பர் 1-ம் தேதி அன்று, கொச்சியில் ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகினர்.

இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கைதாகியுள்ள ராய் வயலாட் எனும் அந்த நபர், நம்பர்.18 எனும் ஹோட்டலின் உரிமையாளர் ஆவார். 

சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக, அவருடன் சேர்த்து 5 ஹோட்டல் ஊழியர்களையும் கைது செய்துள்ளது கேரளாவின் பாலரிவட்டம் காவல்துறை. 

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக காரின் ஓட்டுனர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டிருந்தார். 

எனினும், தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கொச்சியை சேர்ந்த ஹோட்டல் அதிபரை இந்த வழக்கில் கைது செய்தனர். 

திடுக்கிடும் தகவல் :

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 11 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அதில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். 

மேலும், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, விரைவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
*

Share this story