மூன்றாம் முறையாக மோடிஜி; உலகத்தில் வல்லரசாக நாளைய இந்தியா.! - வழக்கறிஞர் எம்.ஜி.ஆர்.நகர் கே.புகழேந்தி.. 

By 
mgrn1

'மூன்றாம் முறையாக பதவியேற்ற நரேந்திர மோடி அவர்களால், இந்தியா உலகத்தில் வல்லரசாக ஆகும்' என தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மக்கள் மன்றத் தலைவர் - வழக்கறிஞர் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் கே.புகழேந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

* மீண்டும், மூன்றாம் முறையாக நேருவிற்கு பிறகு.. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.! 

அன்றைய காலகட்டத்தில், நேரு.. சுதந்திர போராட்ட காங்கிரசின் உழைப்பை காந்தியின் பரிந்துரையில் முதல் பிரதமர். ஆனால், மூத்தவர் என்ற இந்தியாவின் இரும்பு மனிதர் மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய வல்லபாய் படேல் தான் முதல் பிரதமர் ஆகி இருக்க வேண்டும். இவர்கள் குடும்பம் (நேரு - இந்தியா, பாகிஸ்தான் - முகமது அலி ஜின்னா, காஷ்மீர் - ஷேக் அப்துல்லா) ஒருங்கிணைந்த இந்தியாவை பிரித்தவர்கள். 

தற்போதைய மோடியின் வெற்றி தான் உண்மையான, மூன்றாவது ஜனநாயக வெற்றி. பதவியேற்ற மோடிஜி அவர்கள் இந்தியாவை உலகத்தில் வல்லரசாக ஆக்குவார். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிந்து தீர்க்க ஆயுள் வழங்க வேண்டுகிறேன். 

தமிழ்நாட்டில் திராவிட மாடல் மற்றும் திராவிட கட்சிகளை கதறவிட்டு, முன் எப்போதும் இல்லாத வகையில் பிஜேபி தலைமையில் கூட்டணி அமைத்து 3% இருந்த பிஜேபி வாக்கினை 11.5% ஆக உயர்த்தி, 30 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக.வை 7 இடங்களில் டெபாசிட் இழக்க வைத்து, 

2021 வரை பிஜேபி நோட்டா என்றும், 4 தொகுதிகளை வெற்றி பெற்றது நாங்கள் போட்ட பிச்சை என்று கூறிய அதிமுக மற்றும் அதன் தலைவர்களுக்கு பாடம் சொல்லி தந்து, பிஜேபி தமிழ்நாட்டில் வருங்காலம் என்று நிரூபித்த, 

தமிழ் நாட்டில் சாதாரண குக்கிராமமான கொட்டாம்பட்டியில் பிறந்து தனது செயலால் கர்நாடகாவில் கர்நாடகா சிங்கம் என்று பெயர் எடுத்த, தனது 27 வருட IPS வாழ்க்கையை தமிழ்நாடு மக்களுக்காக ராஜினாமா செய்து தமிழ் நாட்டில் சிங்கம் 2 என்ற வகையில், மாபெரும் பணியாற்றியுள்ள அண்ணாமலை குப்புசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்கிறேன்.  

தற்போது, தொண்டர்களின் விருப்பப்படி தமிழ்நாட்டின் பிஜேபி தலைவராக தொடர்ந்து 2026 இல் பிஜேபி தலைமையில் ஆட்சி அமைக்க இறைவனை வேண்டுகிறேன். 

முன்னதாக, NDA கூட்டத்தில் பேசிய மோடி, 'தமிழ்நாட்டில் எங்களுக்கு தெரிந்துதான் போட்டியிட்டோம் என்றும் அபார வளர்ச்சி பெற்று இருக்கிறோம் என்றும், இது வேற கணக்கு, பிறகு தெரியும்' என்றார். மேலும், பிஜேபி தலைவர் மற்றும் தொண்டர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.' 

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு 2026 வரை அண்ணாமலை குப்புசாமி IPS தான் தலைவர். ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஓடி விடுக. இதுதான் தேசிய தலைமையின் தீர்க்கமான முடிவு.

* தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையை தீர்த்தவர் கலோனெல் ஜான் பென்னிகுயிக். இவர், தனது சொத்தையெல்லாம் விற்று, சொந்த செலவில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தமிழக மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல்.

நான், லண்டன் வரும்போதெல்லாம் இந்த புனிதரான பென்னிகுவிக் சமாதிக்கு சென்று வணங்கி, நினைவு கூருவது வழக்கம். நன்றி தெரிவித்து நெகிழ்வது கடமையாக கருதுகிறேன். இங்கே என்னுடன் புகைப்படத்தில் இருப்பவர் தஞ்சை வைத்தியநாதன் எனவும் குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மக்கள் மன்றத் தலைவர் - வழக்கறிஞர் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் கே.புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.
 

Share this story