மேலும் உயிரிழப்பு : நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

By 
More casualties Student suicide by writing NEET exam

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும்,  கனிமொழி என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

'தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கும் நீட் தேர்வினை தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். 

நீட் தேர்வை முழுமையாக நீக்கும்வரை, இந்த சட்டப்போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறியுள்ளார்.

Share this story