இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு; நாளை பிளஸ்-2 ரிசல்ட் வெளியீடு..

neet5

* எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்காண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

இந்த ஆண்டு மே 7-ந்தேதி(இன்று) நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடப்பதை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3-ந்தேதி முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அந்த நுழைவு சீட்டில் மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுளள்து.

* பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.

 

Share this story