என் கவுன்டரில் நக்சல் தலைவர் கொலை : போலீஸ் தகவல்

Naxal leader killed at my counter Police information

மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் 'சி-60' என்ற சிறப்பு கமாண்டோ படையினர்  நேற்று நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.  

போலீஸ் தரப்பில் 4 கமாண்டோ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்க ஹெலிகாப்டர் விரைந்தது. 

மீட்கப்பட்ட அவர்கள் நாக்பூர் கொண்டு செல்லப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே, நேற்று நடந்த என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். 

எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புடைய நக்சல் அமைப்பின் தலைவர் மிலிந்த் டெல்தும்டே நேற்று நடைபெற்ற என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மிலிந்த் டெல்தும்டே தலைமறைவானவராக அறிவிக்கப்பட்டிருந்தார் என்றும் காவல் துறை கூறியுள்ளது.

அதேபோல், நேற்று என்கவுன்டர் நடைபெற்ற இடத்தில் 29 துப்பாக்கிகள், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
*

Share this story