நீட் தேர்வு முடிவு : சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பு
 

NEET EXAMINATION RESULTS The Supreme Court today delivered a sensational verdict

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 12-ந்தேதி நடந்தது. 

இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.

மறுதேர்வு :

இந்நிலையில், 2 மாணவர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில் உள்ள எண்கள் தவறாக பொருத்தப்பட்டதாகவும், கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த வைஷானவி போபாலி, அபிஷேக் சிவாஜி ஆகிய 2 பேர் தங்களுக்கு நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இன்று தீர்ப்பு :

இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு 2 மாணவர்களுக்கும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், அதன் பின்னரே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மறுதேர்வு தேதி மற்றும் தேர்வு மையம் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு 48 மணி நேரத்துக்கு முன்கூட்டியே அறிவிக்கவும் அவர்களின் தேர்வு முடிவுகளை 2 வாரங்களில் வெளியிடவும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

அதில், கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளதை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. 

அதில், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டனர்.

தாமதப்படுத்த முடியாது :

மும்பை ஐகோர்ட்டு விதித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:-

இரண்டு மாணவர்களுக்காக, 16 லட்சம் மாணவர்களுக்கான முடிவுகளை தாமதப்படுத்த முடியாது. அவர்களின் நலன்களை சமநிலைப்படுத்த வேண்டும். 

தேர்வு நாளில் ஏற்பட்ட குழப்பத்தால், நேரத்தை இழந்த 2 மாணவர்களுக்கு என்ன செய்வது என்பது குறித்த திட்டம் பற்றி தேசிய தேர்வு முகமை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.
*

Share this story