புத்தாண்டுக் கொண்டாட்டம் : போலீஸ் எச்சரிக்கை; புதிய தகவல்..
 

New Year's Eve Police alert; New information ..


சென்னை மாநகர போலீசார், 'புத்தாண்டுக் கொண்டாட்டத்தில், விதிமுறை மீறினால் வாகனங்கள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.

மேலும், நேற்று இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தொடர்பாக, புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளனர்.

அதில், 'நாளை (31-ந்தேதி) இரவு 12 மணிக்குப் பிறகு, பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர்ஜிவால் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். 
அந்தச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :

'தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு, சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 

நாளை (31-ந் தேதி) இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு 1.1.2022 அன்று காலை 5 மணி வரை அனுமதி இல்லை.

எனவே, பொதுமக்கள் அனைவரும் நாளை (31-ந்தேதி) இரவு 12 மணிக்கு முன்பு, தங்கள் பயணங்களை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது'.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story