அமித்ஷா, ராஜ்நாத், நிர்மலாவுக்கு மாற்றமில்லை; நட்டாவுக்கு சுகாதாரம்: மோடி 3.0-ல் யாருக்கு எந்தத் துறை? முழு விவரம்..
Jun 10, 2024, 20:54 IST
By
![3modi2](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/d53efa950f2a32cf9e27f401ac83bd47.jpg)
பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவரம் திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ரமேஷ் ஆகியோரின் துறைகளில் மாற்றமில்லை. முழு விவரம்:
- பிரதமர் மோடி - மத்திய பணியாளர், அணுசக்தி துறை, விண்வெளி துறை
- ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத் துறை
- அமித் ஷா - உள்துறை
- நிதின் கட்கரி - மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
- ஜெ.பி.நட்டா - சுகாதாரத் துறை
- சிவராஜ் சிங் சவுகான் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை
- நிர்மலா சீதாராமன் - நிதித் துறை
- எஸ்.ஜெய்ஷங்கர் - வெளியுறவுத் துறை
- மனோகர் லால் கட்டார் - வீட்டுவசதி மற்றும் மின் துறை
- ஹெச்.டி.குமாரசாமி - கனரக தொழில் துறை
- பியூஷ் கோயல் - தொழில் மற்றும் வர்த்தகத் துறை
- தர்மேந்திர பிரதான் - கல்வித் துறை
- ஜித்தன் ராம் மாஞ்சி - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
- ராஜீவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளம் மற்றும் பால்வளத் துறை
- சர்பானந்த சோனோவால் - துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை
- வீரேந்திர குமார் - சமூக நீதித் துறை
- ராம்மோகன் நாயுடு - விமானப் போக்குவரத்து துறை
- பிரகலாத் ஜோஷி - நுகர்வோர் விவகாரங்கள், உணவுத் துறை
- ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நலத் துறை
- கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை
- அஷ்விணி வைஷ்ணவ் - ரயில்வே துறை
- பூபேந்திர யாதவ் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை
- ஜோதிராதித்ய சிந்தியா - தகவல் தொழில்நுட்பத் துறை
- கஜேந்திரசிங் ஷெகாவத் - சுற்றுலா மற்றும் கலாச்சார துறை
- கிரண் ரிஜிஜூ - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை
- அன்னபூர்ண தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை
- ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியத் துறை
- மன்சுக் மாண்டவியா - தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலன் துறை
- கிஷன் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கள் துறை
- சிராக் பாஸ்வான் - உணவு பதப்படுத்துதல் துறை
- சி.ஆர்.பாட்டீல் - ஜல் சக்தி துறை
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) விவரம்: இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணை அமைச்சர் (தனி பொறுப்பு); திட்டங்கள் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர்
- ஜிதேந்திர சிங் - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலக இணை அமைச்சர்; பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் இணை அமைச்சர்; அணுசக்தித் துறை இணை அமைச்சர்; விண்வெளித் துறை இணை அமைச்சர்
- அர்ஜூன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
- ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராவ் - ஆயுஷ் அமைச்சகம் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்
- ஜெயந்த் சவுத்ரி - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); கல்வித் துறை இணை அமைச்சர்
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இணை அமைச்சர்கள் பட்டியல்:
- ஜிதின் பிரசதா - வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர்
- ஸ்ரீபத் யசோ நாய்க் - மின் துறை இணை அமைச்சர் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர்
- பங்கஜ் சவுத்ரி - நிதித் துறை இணை அமைச்சர்
- கிருஷ்ணன் பால் - கூட்டுறவு இணை அமைச்சர்
- ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்
- ராம்நாத் தாக்கூர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை அமைச்சர்
- நித்யானந்த் ராய் - உள்துறை விவகாரங்கள் இணை அமைச்சர்
- அனுப்ரியா படேல் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உரங்கள் மற்றும் ரசாயனத் துறை இணை அமைச்சர்
- வி.சோமன்னா - ஜல் சக்தி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர்
- சந்திர சேகர் பெம்மாசனி - ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர்
- எஸ்.பி. சிங் பாகல் - மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர்
- ஷோபா கரந்த்லாஜே - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர்
- கிர்த்திவர்தன் சிங் - சுற்றுச்சூல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
- பி.எல்.வர்மா - உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் சமூக நீதி மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்
- சாந்தனு தாக்கூர் - துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர்