ஓபிஎஸ் மனைவி இறுதி ஊர்வலம் : பெரியகுளத்தில், இன்று நல்லடக்கம்
Sep 2, 2021, 16:13 IST
By
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.
அவருடைய உடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் இறுதி ஊர்வலம் இன்று தொடங்கியது.
இறுதி ஊர்வலத்தில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தம்பிதுரை, செல்லூர் ராஜு
உதயகுமார், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பெரியகுளத்தில் உள்ள மயானத்தில் உடல் எரியூட்டப்படுகிறது.
*