புரட்சியை கொப்பளித்த எங்கள் உணர்ச்சிக் கவிஞன் :  மருது அழகுராஜ் புகழ் மாலை 

By 
marudhu152

இன்று, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள். இதனையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ்,  வெளியிட்டுள்ள கவியுரை வருமாறு :

* கொலை வாளினை
எடடா

கொடியோர்
செயல்
அறவே

குகைவாழ்
ஒரு புலியே

உயர் குணம்
மேவிய
தமிழா"...

இப்படி

எரிமலைத்
தமிழால் 

இன மானம்
எழுப்பவே

கனமான
தமிழ் கொண்டு 
கவிபாடிட

புதுவையில்
இருந்த
புறப்பட்ட 

புரட்சிக் கவிஞன்...

* உலகாளும்
தமிழின்
அவதாரப்
பிள்ளையாகி

உரக்கக்
கூவிய
உணர்ச்சிக்
கவிஞன்..

"தமிழால்
பாரதி
தகுதி பெற்றதும்

தமிழ் பாரதியால்
தகுதி பெற்றது" என

முண்டாசு
கவியின்
முத்தமிழ்
தொண்டுக்கு

முதன்மைச்
சீடனாகி

சுப்புரத்தினம்
எனும்
பெற்றோர்
சூட்டிய தன் பெயரை..

பாரதிதாசன்
என

பதமாற்றம்
செய்து கொண்ட
பாசக்கவிஞன்

* மங்காப்
புகழ் தமிழாலே

மாஞ்சோலை
குயிலாக
கூவியவன்..

மாணாக்கர்க்கு
மாசற்ற தமிழை
போதிக்கும்
ஆசிரியரனாய்

அறப்பணியை
ஆண்டு பல
ஆற்றியவன்..

* கிறுக்கன்
கிண்டல்
காரன்
என்றெல்லாம் 

புனைப்
பெயர்களில்
எழுதியே

புரட்சிகள்
படைத்தவன்

புதுச்சேரி
அரசியலில்

புயலாக 
அடித்தவன்..

சட்ட மன்ற
உறுப்பினராக
ஜெயித்தவன்

சாகித்திய அகாதமி
விருது கொய்து
ஜொலித்தவன்..

* தமிழுக்கு
அமுதென்று
பேர்..

அந்த தமிழின்பத்
தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்..என்று

தீராநதி
தமிழாலே

தித்திப்பு
கூட்டியவன்..

பொங்கு தமிழர்க்கு
இன்னல்
என்றால்

சம்ஹாரம் 
நிஜமென்று

சங்காக
முழங்கியவன் 

* ஏழ்ழை
சாதிப்பகை
எனும் தீமையை
ஒழித்து

எங்கும்
சமத்துவம்
செழிக்க

எதுகை மோனைத்
தமிழாலே

புதியதோர் உலகம்
செய்ய

புறப்பட்ட
புரட்சிக் கவிஞன்..

அவன் தான்

எழுத்திலே
கொளுத்தும்
நெருப்பால்

எம் இனத்தை
விழிப்பூட்டிய 

ஒப்பில்லா
உணர்ச்சிக்
கவிஞன்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story