எம்.பி. ஆ.ராசாவின் வாகனத்தை பொதுமக்கள் மறித்ததால் பரபரப்பு..

By 
arasa

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக நீலகிரி எம். பி ஆ. ராசா ஆய்வு நடத்தினார். நவீன வசதிகளுடன் பயணிகள் அமர குளிர் சாதன வசதிகளுடன் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ள நிலையில் ஆ. ராசா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி சேரன் நகர் பகுதியில் ஒரு கோடியே 70லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஆ.ராசாவை திடீரென அங்கு வந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சேரன் நகர் பகுதியில்  நீண்ட காலமாக குடி தண்ணீர் பிரச்சினை இருந்து வருவதாகவும் பல முறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடி தண்ணீர் கிடைப்பதாக புகார் தெரிவித்தனர்.

எனவே பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினையான குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு ஏற்படுத்திவிட்டு பின்னர் சாலை அமையுங்கள் என கூறினர். அப்போது அங்கு இருந்த திமுக நிர்வாகிகள் பொதுமக்களை அங்கிருந்த கலைந்து செல்ல அவர்களை தள்ளி கொண்டு செல்ல காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களை கலைத்து விட்டு ஆ.ராசா வாகனத்தை வழி அனுப்பி வைத்தனர். எம்.பி.ஆ.ராசாவும் புகார் கூறிய பொதுமக்களிடம் எந்த உறுதியும் அளிக்காமல் அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றார்.

Share this story