தமிழ்நாட்டு பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய பிரதமர் மோடி - வைரலாகும் நிகழ்வு.. 

By 
pmwish

டெல்லி பாரத் மண்டபத்தில் முதலாவது தேசிய படைப்பாளர்கள் விருதை பிரதமர் மோடி இன்று வழங்கினார். சிறந்த கதைசொல்லிக்கான விருது உட்பட இருபது பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. மூன்று சர்வதேச படைப்பாளிகள் உட்பட 23 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்.

அந்த  வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி என்பவருக்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். விருதை பெற வந்த அவர், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கினார். பதிலுக்கு பிரதமர் மோடியும் அப்பெண்ணின் காலை மூன்று முறை தொட்டு வணங்கினார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி 'சிறந்த கதை சொல்பவர்' விருதினை பெற்றுள்ளார். அவர், வரலாற்று தகவல்களை யூடியூப் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.

முதலாவது தேசிய படைப்பாளிகள் விருதை வழங்கிய பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, வெற்றி பெற்றவர்களை வாழ்த்தியதுடன், அவர்கள் அனைவரையும் நினைத்து தாம் மிகவும் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். விருது பெற்றுள்ள உங்களின் படைப்புகள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நீங்கள் அனைவரும் இணையத்தின் மிகவும் மதிப்புமிக்க நபர்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த ஆண்டின் பிரபல படைப்பாளி; பசுமை சாம்பியன் விருது; சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி; மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளி; ஆண்டின் கலாச்சார தூதர்; சர்வதேச படைப்பாளி விருது; சிறந்த பயண படைப்பாளி விருது; தூய்மை தூதர் விருது; நியூ இந்தியா சாம்பியன் விருது; டெக் கிரியேட்டர் விருது; ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருது; மிகவும் படைப்பாற்றல் கொண்ட படைப்பாளி (ஆண் & பெண்); உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளி;

கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளி; கேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளி; சிறந்த மைக்ரோ கிரியேட்டர்; சிறந்த நானோ படைப்பாளி; சிறந்த உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி படைப்பாளர் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

Share this story