பிரபாகரன் மகள் வீடியோ வைரல்.. உண்மையா?

By 
thuvara

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட நிலையில் அவருடைய மனைவி மற்றும் மகள் வெளிநாட்டுக்கு தப்பித்து விட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த செய்தி உறுதிப்படுத்தவில்லை.

அவ்வப்போது ஈழத்தமிழர்களும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவருடைய மனைவி மற்றும் மகளும் உயிரோடு இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 27ஆம் தேதி திடீரென பிரபாகரன் மகள் என்று கூறப்படும் துவாரகா வீடியோ வைரல் ஆனது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் பொதுவெளியில் தோன்றுவார்கள் எனவும்உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்மாவீரர் நாளில் (நவ.27) பிரபாகரனின் மகள் துவாரகா தமிழ் ஒளி என்ற யூ டியூப் சேனலில் காணொலி வாயிலாக பேசுவார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதன்படி, நேற்று மாலை துவாரகா பேசியதாக ஒரு வீடியோ வெளியானது.

சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில்’எத்தனையோ ஆபத்துகள்நெருக்கடிகள்சவால்கள்துரோகங்களை கடந்தே இன்று உங்கள் முன்னால் நான் பேசுகிறேன். அதேபோலஒரு நாள் தாயகம் திரும்பி அங்கு எங்களது மக்களுடன் இருந்துஅவர்களுக்கு பணி செய்வதற்கு காலம் வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எங்களுடன் தனித்து நின்று போர் புரிய திராணியற்ற சிங்கள அரசுசக்தி வாய்ந்த நாடுகளை வளைத்து தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டது. ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்று சொன்னார்கள் ஆனால் கிடைக்கவில்லை. ஈழத்தமிழர்களுக்கு ஐ.நா.வும் நீதி வழங்கவில்லை.

தமிழீழத்திற்கு போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமையாகும். இத்தனை ஆண்டுகளாக நமக்கு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள்தாய் தமிழக உறவுகளுக்கு நன்றி. சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்லஎதிராக செயல்பட்டதும் இல்லை. பிரபாகரன் குறிப்பிட்டது போல் பாதைகள் மாறினாலும்நமது லட்சியம் மாறாது இவ்வாறு அவர் பேசினார்.

ஆனால்இந்த காணொலியில் பேசியது  உண்மையிலேயே பிரபாகரன் மகள்தானா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. இது துவாரகா அல்ல எனவும், செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story