பொதுமக்கள் கவனிக்கவும் : மெகா தடுப்பூசி முகாம்..தமிழக சுகாதாரத்துறை...

By 
Public Note Mega Vaccine Camp..Tamil Nadu Health Department ...

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

இதுவரை, 3 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மட்டும் 68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். 


கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1 கோடியே 42 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

இன்று :

இந்நிலையில் இன்று 4-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் தடுப்பூசிகள் கை இருப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முகாம்கள் நடப்பதை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அவர் கூறும்போது, 22 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி இதுவரை போடவில்லை.

இந்த முகாம்கள் தெருக்களிலும், வீடுகளின் அருகிலேயும் நடத்தப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

விழிப்புணர்வு :

தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் கூட்டம் அலைமோதியது.

வழிப்போக்காக சென்றவர்கள் கூட வாகனங்களை நிறுத்திவிட்டு, முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு சென்றதை பார்க்க முடிந்தது.

வீடுகளின் அருகிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதால் பெண்கள் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

Share this story