மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் : பிரதமர் மோடி உரை..
Sat, 8 Apr 2023

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ம் தேதி அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்த டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
'நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்க அரும்பாடு படும் அனைவருக்கும் உலக சுகாதார தினமான இன்று நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த நமது அரசு தொடர்ந்து பணியாற்றும். மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.