முதல்முறையாக கிருஷ்ணகிரிக்கு ரஜினி வருகை; ஏன் தெரியுமா?

By 
rk1

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.

ரஜினி படப்பிடிப்பு இல்லாத போது பெங்களூரில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களின் வீட்டிற்கு சென்று வருவார். சமீபத்தில் இவர் பெங்களூர், ஜெயநகர் பேருந்து டிப்போவுக்கு சென்று பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடினார்.

பின்னர் பேருந்து இயக்குனர் மற்றும் நடத்துனருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். தற்போது இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தன் பிறந்த ஊரான நாச்சிகுப்பம் கிராமத்திற்கு முதல்முறையாக சென்றுள்ளார்.

அங்கு தன் அண்ணன் சத்யநாராயண ராவ் உடன் சேர்ந்து பெற்றோர் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Share this story